பாராளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ரூ.2.5 லட்சம் என்ற நிலையிலேயே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வருமான வரி விதிப்பு மாற்றப்படவில்லை.
ஆனால், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு (5 சதவீத கழிவு) என அறிவிக்கப்பட்டது. ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
இந்திய கரன்சி
அதாவது, தனிநபரின் மொத்த வருமானமே ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள், விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த வேண்டும்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.